தேசிய விருது: சிறந்த தமிழ்ப்படமாக ‘பாரம்’ தேர்வு!
சிறந்த தமிழ்ப்படமாக ‘பாரம்’ தேர்வாகியுள்ளது. சிறந்த ஹிந்திப் படமாக...
ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய விருதுப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
சிறந்த தமிழ்ப்படமாக ‘பாரம்’ தேர்வாகியுள்ளது. சிறந்த ஹிந்திப் படமாக அந்தாதுன் தேர்வாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றுள்ளது.