செய்திகள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை!

எழில்

கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள அனு இம்மானுவேல், தமிழில் இதற்கு முன்பு, துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, பாரதிராஜா, சமுத்திரக்கனி, நடராஜன், ஆர்கே சுரேஷ் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. ஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி ரூபன். இசை - இமான். படப்பிடிப்பு மே 8 அன்று தொடங்கியது. 

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. படத்துக்கு, நம்ம வீட்டுப் பிள்ளை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் வெளியீடு என்கிற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. 

இதுதவிர ஆர். ரவிக்குமார், மித்ரன், விக்னேஷ் சிவன் ஆகிய இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படம் டிசம்பர் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலையில் தன்னுடைய மார்க்கெட்டை, அந்தஸ்த்தை மீண்டும் நிரூபிக்கவேண்டிய நிலைமையில் உள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்திய அவருடைய படங்களான வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் வசூலில் எவ்வித ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தவில்லை. சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படங்களைப் பெரும்பாலான ரசிகர்கள் விரும்பவில்லை. இந்த விதத்தில் இவ்விரு படங்களும் சிவகார்த்திகேயனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. 2016-ல் வெளியான ரஜினி முருகன், ரெமோ ஆகிய இரு படங்களையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். இதனால் வசூலிலும் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டார் சிவகார்த்திகேயன். ஆனால் கடைசி மூன்று படங்களில் அவ்வித ஏற்றம் அவருக்கு அமையவில்லை. இதனால் பலவிதமான மாற்றங்கள் உருவாகியுள்ளன. தற்போதைய சூழலில், கடந்த வருடம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்திய கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜை மலை போல் நம்பியுள்ளார் சிவகார்த்திகேயன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT