செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து ஒரு படத்தில் தான் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

எழில்

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். வொய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 

தனுஷ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன். கேங்ஸ்டர் - த்ரில்லவர் வகையில் உருவாகவுள்ள படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் இங்கிலாந்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து ஒரு படத்தில் தான் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் தகவல் தெரிவித்துள்ளார். 

இதுதவிர தேசிய விருது பெற்ற பதாய் ஹோ பட இயக்குநர் அமித் சர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கனுடன் இணைந்து ஹிந்திப் படமொன்றிலும் அவர் நடிக்கிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கதாநாயகி வேடத்தைப் பிரதானமாகக் கொண்ட இரு தெலுங்குப் படங்களிலும் பிரியதர்ஷன் - மோகன்லால் இணைந்து உருவாக்கும் மலையாளப் படத்திலும் தான்  நடிப்பதாக அவர் பேட்டியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

விநாயகர் சதுர்த்தி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT