செய்திகள்

சாஹோ படத்துக்கு ரூ. 100 கோடி சம்பளமா?:  எதிர்பாராத பதிலை அளித்த நடிகர் பிரபாஸ்!

சாஹோ படத்துக்காக நடிகர் பிரபாஸுக்கு ரூ. 100 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு...

எழில்

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம், ரூ. 250 கோடியில் உருவாகியுள்ள சாஹோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. பாகுபலி 2 படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடித்துள்ள படம் என்பதால் சாஹோ படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி போன்றோர் நடித்துள்ளார்கள். ஆகஸ்ட் 30 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாஹோ படத்துக்காக நடிகர் பிரபாஸுக்கு ரூ. 100 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார் பிரபாஸ். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாகுபலி படம் மிகவும் உயரத்தில் வைத்துவிட்டது. ஆனால் சாஹோ படம் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. அதனால் என்னுடைய வழக்கமான சம்பளத்தைக் கேட்கமுடியாது என எனக்குத் தெரியும். எனவே 20 சதவிகிதக் குறைவான சம்பளத்தில் தான் படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். பிறகு படத்தின் பட்ஜெட் உயர்ந்தது. எனக்கான சம்பளத்தைத் தர என்னுடைய நண்பர்கள் தயாராக இருந்தாலும், அதைப் பெற்றுக்கொள்ள எனக்கு மனமில்லை. ஏனெனில் படத்துக்கு என்ன வசூல் கிடைக்கும் என்பதை அறியாமலேயே அவர்கள் செலவழித்துள்ளார்கள் என்று பதில் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவில் சிக்கல்

SCROLL FOR NEXT