செய்திகள்

சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படம்: பாடல் விடியோ வெளியீடு!

எங்க அண்ணன் என்கிற அந்தப் பாடலின் விடியோவையும் சேர்த்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது...

எழில்

கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வரும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள அனு இம்மானுவேல், தமிழில் இதற்கு முன்பு, துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, பாரதிராஜா, சமுத்திரக்கனி, நடராஜன், ஆர்கே சுரேஷ் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. ஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி ரூபன். இசை - இமான். படப்பிடிப்பு மே 8 அன்று தொடங்கியது. செப்டம்பரில் வெளியாகவுள்ளது.  

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. எங்க அண்ணன் என்கிற அந்தப் பாடலின் விடியோவையும் சேர்த்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இடையிலான அண்ணன் - தங்கை உறவை வெளிப்படுத்தும் பாடலாக இது அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

SCROLL FOR NEXT