செய்திகள்

இயக்குநர் ஆகிறார் அமிர்கானின் மகள் ஐரா கான்!

கடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர் ஐரா கான்.

தினமணி

கடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர் ஐரா கான். பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகளான இவர் இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளார்.

ஐரா கான் மேடை நாடகங்களில் (தியேட்டர் ஆர்ட்) ஆர்வம் உடையவர். விரைவில் வெள்ளித் திரையிலும் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அதற்கு முன் மேடை நாடகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேடை நாடகம் பாரம்பரியம் மிக்கது. அதில்தான் பார்வையாளர்களை நேரடியாகப் பார்த்து அவர்களின் எதிர்வினைகளை நேரடியாகப் பார்க்க முடியும். அதனாலேயே எனக்கு மேடை நாடகங்களின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது என்று அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் ஐரா கான்.

மேலும் அவர் கூறுகையில், கிரேக்கத்தில் நடந்த துயரமான நிகழ்வொன்றை மையமாக வைத்து யூரிபிடிஸ் மீடியா என்ற பெயரில் மேடை நாடகத்தை இயக்க விருக்கிறாராம். இதற்கான முதல் கட்ட வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில், வரும் டிசம்பர் மாதம் இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் நிகழ்த்தப்பட உள்ளது என்றார். இந்த மேடை நாடகத்துக்கான ஒத்திகை மும்பையில் நடைபெறவிருக்கிறது. இந்நாடகத்தில் ஐரா ஏதேனும் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாரா, அல்லது அமீர் கான் தோன்றுவாரா என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT