செய்திகள்

காதல் திருமணம் குறித்து தகவல் தெரிவிக்காதது ஏன்?: அனிதா சம்பத் விளக்கம்! (படங்கள்)

25-ம் தேதி திருமணம் முடிந்தது. 22-ம் தேதியே இன்ஸ்டாவில் பதிவிட்டேன். இன்ஸ்டாவில்...

எழில்

பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் அனிதா சம்பத், தனக்குத் திருமணமானது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய திருமணப் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் அவர் பகிர்ந்துள்ளார். திருமணம் குறித்து இன்ஸ்டகிராமில் அனிதா சம்பத் எழுதியதாவது:

25-ம் தேதி திருமணம் முடிந்தது. 22-ம் தேதியே இன்ஸ்டாவில் பதிவிட்டேன். இன்ஸ்டாவில் 26-ம் தேதி வரை ஏதோ காரணத்தால் பிளாக் செய்யப்பட்டு இருந்தது. எனவே அதுவரை என் பதிவு போஸ்ட் செய்யப்பட முடியாமல் போய்விட்டது..

ஃபேஸ்புக், ட்விட்டரில் நான் தீவிரமாக இல்லை. இன்ஸ்டாவும் வேலை செய்யவில்லை என்பதால் சொல்ல முடியாமல் போய்விட்டது. மன்னிச்சூ..

அனிதா சம்பத் திடீர் திருமணம் என்றெல்லாம் யூடியூப் சேனல்களில் டப்ஸா விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றுமே இல்லை.

3 வருடக் காதல். பெரியவர்கள் சம்மதத்தோடு நடந்த திருமணம் தான்.

திருமணத்திற்கு தாம் தூம் என செலவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எனவே மிக மிக எளிமையான முறையில் குடும்பத்தார் மற்றும் மிகச்சில நண்பர்களை மட்டும் அழைத்திருந்தோம். முன்கூட்டியே திருமணம் பற்றி சொல்லிவிட்டால் யூடியூப் சேனல்களில் வந்துவிடும். பின் நான் அழைக்காதவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது என்றுதான் கடைசியில் பதிவு செய்தேன். இன்ஸ்டகிராம் 26-ம் தேதி வரை பிளாக்கில் இருந்ததால் இன்றுதான் பதிவிட முடிந்தது. வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT