செய்திகள்

நடிகர் சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

இயக்குனர் விஜயஸ்ரீ ஜி எழுதி, இயக்கிய ‘தாதா 87’ படத்தில் தனது 87வது வயதில், ஒரு அதிரடியான தாதா வேடத்தில் நடித்த சாருஹாசன்

DIN

இயக்குனர் விஜயஸ்ரீ ஜி எழுதி, இயக்கிய ‘தாதா 87’ படத்தில் தனது 87வது வயதில், ஒரு அதிரடியான தாதா வேடத்தில் நடித்த சாருஹாசன், இன்றும் தனது 90-வது வயதிலும், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டை விட சில மாதங்களே வயதில் பெரியவர் என்றாலும், உலகிலேயே இன்றும் நடித்து வரும் அதிக வயதுடைய ஒரே கலைஞன் சாருஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. 

17வது சென்னை சர்வதேச திரைப்படவிழாவின் துவக்க நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது கலையுலகப் பங்களிப்பை பாராட்டி, கௌரவிக்கும் விதமாக அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்படுகிறது.  பல்வேறு பிராந்திய மொழிகளில் சுமார் 50 படங்களில் நடித்திருக்கும் சாருஹாசன், 1986ல் வெளியான ‘தபாரனா கதே’ திரைப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நான் திமுகவின் பி டீமா? பன்னீர்செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

SCROLL FOR NEXT