முகப்பு
செய்திகள்

உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்: அமித் ஷாவுக்கு அக்‌ஷய் குமார் வேண்டுகோள்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய உடல்நலத்தைப் பேணிக் காக்கவேண்டும் என பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்... 

Updated On : 18 டிசம்பர், 2019 at 3:12 PM
பகிர்:

உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய உடல்நலத்தைப் பேணிக் காக்கவேண்டும் என பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்‌ஷய் குமாரிடம், அமித் ஷாவிடம் நீங்கள் கேட்கவேண்டியது ஏதாவது உள்ளதா எனக் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அக்‌ஷய் குமார், அமித் ஷா அவர்களிடம் நான் கேட்கவேண்டியது ஒன்றே ஒன்று தான்.  உங்கள் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். 

நம் நாட்டின் முக்கியமான நபர் அவர். மாலை 6.30 மணிக்கு மேல் எதுவும் சாப்பிட வேண்டாம் என அவருக்கு அறிவுரை கூறுவேன். அது அவருக்கு நல்லது. அவர் அப்படிச் செய்தால் அனைவருக்கும் நல்லது. சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சாப்பிடக்கூடாது என்று நம் சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. நம் உடல்நலத்துக்கு இது நல்லது என்று கூறியுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.