செய்திகள்

மாணவர் ஒற்றுமையை வலியுறுத்திய பாலிவுட் நடிகை

ANI

மாணவர் சமூகத்துடன் ஒற்றுமையை பலப்படுத்துவதில் பிரியங்கா சோப்ரா சக பாலிவுட் நட்சத்திரங்களுடன் அண்மையில் இணைந்துள்ளார்.

பிரியங்கா உலகளாவிய யுனிசெஃப் நல்லிணக்க தூதராக உள்ளார். மேலும் கல்வி குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்.

அண்மையில் மாணவர் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை பற்றி ட்விட்டரில் பிரியங்கா கூறியுள்ளது, "ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பது எங்கள் கனவு. கல்வி அவர்களை சுதந்திரமாக சிந்திக்க வைக்கும். தங்களுக்கான குரலை கொடுக்கும்விதமாகத்தான் அவர்களை நாங்கள் உருவாக்குகிறோம். வளர்ந்து வரும் ஜனநாயகத்தில், குழந்தைகளின் உரிமைக்காக குரல் கொடுப்பது அத்யாவசியமானது.  ஆனால் அமைதி வழியில் நடக்கும்போது, அவர்களுக்கு எதிராக வன்முறை செலுத்துவது தவறு. ஒவ்வொருவரின் குரலும் முக்கியம். காரணம், ஒவ்வொரு குரலும் இந்தியாவை மாற்றுவதற்காக செயல்படும்’ என்று பதிவிட்டுள்ளார். 

படங்களைப் பொருத்தவரை, பிரியங்கா சோப்ரா கடைசியாக ஷோனாலி போஸின் 'தி ஸ்கை இஸ் பிங்க்' படத்தில் ஃபர்ஹான் அக்தர், ரோஹன் சரஃப் மற்றும் ஜைரா வாசிம் ஆகியோருடன் நடித்தார். இந்தப் படம் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT