செய்திகள்

பொங்கலுக்கு வெளியாவதை உறுதி செய்துள்ள 3 படங்கள்!

வருகிற பொங்கலுக்கு 3 தமிழ்ப் படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஜினி நடித்த தர்பார், தனுஷ் நடித்த பட்டாஸ் மற்றும் சிவா நடித்த சுமோ. 

எழில்

இந்த வருட பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் படங்களும் தீபாவளிக்கு பிகில், கைதி படங்களும் வெளியாகின. இந்த நான்குமே வெற்றி பெற்று அசத்தின.

இந்நிலையில் வருகிற பொங்கலுக்கு 3 தமிழ்ப் படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஜினி நடித்த தர்பார், தனுஷ் நடித்த பட்டாஸ் மற்றும் சிவா நடித்த சுமோ. 

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினி நடித்துள்ள 167-வது படம். ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. சுனில் ஷெட்டி, பிரதீக் பப்பர் போன்றோரும் நடித்துள்ளார்கள். ஜனவரி 9 அன்று தர்பார் வெளியாகவுள்ளது. இதனால் இந்தப் படம் பொங்கல் விடுமுறை தினங்களால் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் - பட்டாஸ். தனுஷ், சினேகா, நவீன் சந்திரா, மெஹ்ரீன், நாசர், சதீஷ் போன்றோர் நடித்துள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு இசை விவேக் - மெர்வின். பட்டாஸ், ஜனவரி 16 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்ப்படம் 2 படத்துக்கு அடுத்ததாக சுமோ என்கிற படத்தில் நடித்துள்ளார் சிவா. சிவா கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாசிரியராகவும் இப்படத்தில் பணிபுரிந்துள்ளார். எஸ்.பி. ஹோசிமின் இயக்கியுள்ளார். ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோவும் பங்குபெற்றுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளருமான இயக்குநருமான ராஜீவ் மேனன், ஒளிப்பதிவு செய்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

SCROLL FOR NEXT