செய்திகள்

இந்தியாவில் மட்டும் ரூ. 240 கோடி வசூலித்துள்ள ஹிந்திப் படம்!

எழில்

பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள படம் - சிம்பா. ரன்வீர் சிங், சாரா அலி கான், அபூர்வா மேத்தா போன்றோர் நடித்துள்ள இப்படம் டிசம்பர் 28 அன்று வெளியானது.

முதல் 3 நாள்களில் ரூ. 50 கோடி வசூலை இந்தியாவில் எட்டிய சிம்பா படம், 5-வது நாளிலேயே ரூ. 100 கோடி வசூலைத் தொட்டது. ரூ. 150-வது கோடி வசூலை முதல் வாரத்திலும் ரூ. 200 கோடி வசூலை 12-வது நாளிலும் அடைந்து சாதனை படைத்தது. இந்நிலையில் சிம்பா படம், 6-வது வார இறுதியுடன் அதாவது கடந்த ஞாயிறு வரை மொத்தமாக இந்தியாவில் மட்டும் ரூ. 240 கோடி வசூலித்துள்ளது. புதிய படங்களின் வரவுகளால் இதன் வசூல் மிகவும் குறைந்துவிட்டதால் இதற்குப் பிறகு ரூ. 250 கோடியைத் தொடுவது கடினம். என்றாலும் கடந்த வருட சூப்பர் ஹிட் படங்களில் சஞ்சு, பத்மாவத்துடன் சிம்பா படமும் இணைந்துள்ளது. 

2018-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான பத்மாவத் படம் ரூ. 300 கோடி வசூலை எட்டியது. இந்நிலையில் வருடக்கடைசியில் வெளியான சிம்பா படத்தின் வசூல் ரூ. 240 கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த வருடம் பத்மாவத், சஞ்சு, சிம்பா ஆகிய 3 ஹிந்திப் படங்களும் இந்தியாவில் மட்டும் ரூ. 200 கோடி வசூலை எட்டியுள்ளன. 2018-ல் ரூ. 100 கோடியைத் தொட்ட 13-வது ஹிந்திப் படம் இது. 

ரோஹித் ஷெட்டி இயக்கிய படங்களில் இந்தியாவில் ரூ. 100 கோடியை வசூலித்துள்ள எட்டாவது படம். இயக்குநர்களில் வேறு யாருக்கும் இத்தனை ரூ. 100 கோடி ஹிட் படங்கள் கிடையாது. ரன்வீர் படங்களில் இந்தியாவில் ரூ. 100 கோடியை எட்டியுள்ள நான்காவது படம் இது. 

இந்தியாவில் வரி நீங்கலாக ரூ. 300 கோடியை எட்டியுள்ள ஹிந்திப் படங்கள்: பிகே (2014), பஜ்ரங்கிபைஜான் (2015), சுல்தான் (2016), டங்கல் (2016), பாகுபலி 2 (2017), டைகர்ஜிந்தாஹை (2017), பத்மாவத் (2018), சஞ்சு (2018). இப்படங்களில் ரூ. 500 கோடியைத் தாண்டிய ஒரே படம் - பாகுபலி 2 (ஹிந்தி டப்பிங்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT