முகப்பு
செய்திகள்

பாடகர் எஸ்.பி.பி-யின் தாய் காலமானார்!

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தாய் சகுந்தலம்மா நெல்லூரில் நேற்று காலமானார். அவருக்கு வயது, 89.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:04 AM
பகிர்:

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தாய் சகுந்தலம்மா நெல்லூரில் நேற்று காலமானார். அவருக்கு வயது, 89.

எஸ்.பி. சம்பமூர்த்தியைத் திருமணம் செய்த சகுந்தலம்மாவுக்கு 8 குழந்தைகள். 3 மகன்கள், 5 பெண்கள். அவர்களில் எஸ்.பி.பியும் எஸ்.பி. சைஜலாவும் திரைத்துறையில் பாடகர்களாகப் புகழ்பெற்றுள்ளார்கள். எஸ்.பி.பியின் தந்தை 1987-ல் காலமானார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவுடன் இருந்த சகுந்தலா நேற்று காலமாகியுள்ளார். வெளிநாட்டுக் கச்சேரியில் இருந்த எஸ்.பி.பி. நெல்லூருக்கு விரைந்துள்ளார். சகுந்தலம்மாவுக்கு இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.