செய்திகள்

ரூ. 200 கோடி வசூலைத் தாண்டிய அடுத்த ஹிந்திப் படம்!

எழில்

கடந்த 2016 செப்டம்பர் 18-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ தலைமையக கட்டடத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் படையினர் 17 பேர் உயிரிழந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதே மாதம் 29-ஆம் தேதி எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து சென்று பயங்கரவாதிகள் ஊடுருவத் தயாராக இருந்த 7 முகாம்களில் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் அறிவித்தது. சிறப்புப் படையினர் நடத்திய இந்தத் தாக்குதலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலை மையமாகக் கொண்டு உரி - தி சர்ஜிகல் ஸ்டிரைக் என்கிற ஹிந்திப் படம் சமீபத்தில் வெளியானது. வெளியான நாள் முதல் வசூலில் இந்தப் படம் சாதனை செய்து வருகிறது. 

நான்கு வாரங்களில் இந்தப் படம் ரூ. 200 கோடி வசூலை எட்டியது. முதல் வாரம் ரூ. 71 கோடி வசூலை எட்டிய இந்தப் படம் அடுத்த வாரம் இந்தியாவில் ரூ. 63 கோடியும் மூன்றாவது வாரத்தில் ரூ. 37 கோடியும் நான்காவது வாரத்தில் ரூ. 20 கோடியும் வசூலித்து மொத்தமாக ரூ. 200 கோடி வசூலை எட்டியுள்ளது. ஐந்தாவது வாரம் இதன் வசூல் மிகவும் நன்றாக உள்ளது. அதாவது பாகுபலி 2 ஹிந்திப் படம் ஐந்தாவது வாரம் வசூலித்ததை விடவும் அதிக அளவில் வசூலித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இதுவரை ரூ. 45 கோடி வசூலித்துள்ளது.

நான்காவது வாரம் டங்கல், சஞ்சு, பிகே படங்களை விடவும் அதிக அளவில் வசூலிக்கும் அளவுக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. நேற்று வரை இந்தப் படம் இந்தியாவில் மட்டும் ரூ. 215 கோடி வசூலித்துள்ளது.

இதற்கு முன்பு, டிசம்பர் 28 அன்று வெளியான ரன்வீர் சிங் நடிப்பில் பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கிய சிம்பா படம் இந்தியாவில் மட்டும் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அதற்கடுத்து உரி - தி சர்ஜிகல் ஸ்டிரைக் படம் வசூலில் சாதனை செய்துவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT