சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ள இளம் நடிகை!
கடந்த வருடம் வெளியான பாலாவின் நாச்சியார் படம் மூலமாகத் தமிழில் அறிமுகமானவர் இவானா...
கடந்த வருடம் வெளியான பாலாவின் நாச்சியார் படம் மூலமாகத் தமிழில் அறிமுகமானவர் இவானா. அதற்கு முன்பு மலையாளப் படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், 24 ஏஎம் ஸ்டூடியோ தயாரிப்பில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் இவானா நடிக்கவுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தில் இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகள் கல்யாணி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.