ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள சர்வம் தாளமயம் பாடல்கள் வெளியீடு!
இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணா நடித்துள்ள படம் - சர்வம் தாளமயம்...
இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணா நடித்துள்ள படம் - சர்வம் தாளமயம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண் ராஜா ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்கள்.
கடந்த டிசம்பர் 28 அன்று சர்வம் தாளமயம் படம் வெளிவருவதாக இருந்தது. ஆனால் திடீரென இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 1 அன்று சர்வம் தாளமயம் வெளியாகும் என அதிகாரபூர்வமாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.