செய்திகள்

ராஜு முருகன் - ஜீவா கூட்டணியில் உருவாகியுள்ள 'ஜிப்ஸி' பட டீசர் 

தனது 'ஜோக்கர்' படத்தின் மூலமும் தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜு முருகனின் மூன்றாவது படமான ஜிப்ஸியின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.   

DIN

சென்னை: தனது 'ஜோக்கர்' படத்தின் மூலமும் தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜு முருகனின் மூன்றாவது படமான ஜிப்ஸியின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.   

குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கும் அடுத்த படம் ஜிப்ஸி. இந்தப் படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்து வருகிறார். ஜீவாவுக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாசலப்பிரதேசம் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் நடிக்கிறார். இவர் பாலிவுட்டில் விளம்பரப் படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். 

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டிங் பொறுப்பைக் கவனித்துக் கொள்கிறார். 

இந்தியா முழுவதும் பயணம் செய்யும் ஒரு இளைஞனின் காதல் கதையைக் கொண்டு ஜிப்ஸி உருவாகியுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT