நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி பெரும் வெற்றிபெற்ற படம் இந்தியன். லஞ்சம், ஊழல் ஆகியவை படத்தின் மையக்கருவாக அமைக்கப்பட்டிருந்தது. இதில் கமல்ஹாசன் சுதந்திரப் போராட்டத் தியாகியாக நடித்திருந்தார். மேலும் தந்தை, மகன் என இரட்டை வேடம்.
இந்நிலையில், இதன் இரண்டாம் பாகத்துக்காக கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணி மீண்டும் தற்போது இணைந்துள்ளது. லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசைமைக்கிறார். துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிம்பு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் நீக்கப்பட்டிருப்பதாகவும், அந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பொங்கல் திருநாளன்று ரசிகர்களுக்கு இனிய விருந்து அளிக்கும் விதமாக இயக்குநர் ஷங்கர், பொங்கல் வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் இந்தியன்-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஜனவரி 18-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.