செய்திகள்

ப்ளூ சட்டை மாறனின் யூடியூப் கணக்கை முடக்கவேண்டும்: ‘சார்லி சாப்ளின் 2’ பட விமரிசனம் தொடர்பாகக் காவல்துறையிடம் இயக்குநர் புகார்!

எழில்

2002-ல் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் ஷக்தி சிதம்பரம். பிரபுதேவா, நிக்கி கல்ராணி, செந்தில், பிரபு போன்றோர் இதில் நடித்துள்ளார்கள். கடந்த வாரம் சார்லி சாப்ளின் 2 படம் வெளியானது.

இந்நிலையில் யூடியூப் தளத்தில் சார்லி சாப்ளின் படத்தை மோசமாக விமரிசனம் செய்த ப்ளூ சட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னைக் காவல் ஆணையரிடம் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் புகார் அளித்துள்ளார். புகாரில் அவர் கூறியுள்ளதாவது:

ப்ளூ சட்டை மாறன் என்பவர் சார்லி சாப்ளின் படத்தை யூடியூபில் விமரிசனம் செய்யப்போவதாகவும் அதில் விளம்பரம் செய்வதற்குப் பெரும் தொகைக் கேட்டும் வற்புறுத்தினார். நாங்கள் விளம்பரமோ பணமோ தர இயலாது என்று மறுத்ததால் சார்லி சாப்ளின் படத்தை மிகத் தரக்குறைவாகவும் ஒருமையில் பேசியும் விமரிசனம் செய்துள்ளார். இதனால் திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் மன உளைச்சல் அடைந்துள்ளார்கள். இந்த விமரிசனத்தால் கோடிக்கணக்கில் மூதலீடு செய்த அவர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்று அச்சத்தைத் தெரியப்படுத்தினார்கள். 

நான் ப்ளூ சட்டை மாறனிடம், படத்தில் இடம்பெற்ற காட்சி குறித்து தவறான தகவலை வெளியிட்டுள்ளீர்கள். படத்தின் ஒட்டுமொத்தக் குழுவையும் ஒருமையில் கேவலமாக, வன்மையாகவும் கடும் சொற்களைப் பயன்படுத்தியதையும் வாபஸ் பெறவேண்டும் என்று நாகரிகமாகக் கேட்டேன். ஆனால் அவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். 

சமூகவலைத்தளம் மூலமாக தவறாகத் துஷ்பிரயோகம் செய்த தமிழ் டாக்கீஸை உடனடியாக முடக்கவேண்டும். ப்ளூ சட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளாதாரத்தை மேம்படுத்த கஞ்சாவை சட்டபூர்வமாக்கும் பாகிஸ்தான்!

வாகனங்களில் ஸ்டிக்கர்: மருத்துவர்களுக்கு அனுமதி தர மறுப்பு!

தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை: முதல்வர் ரேவந்த் ரெட்டி

இந்தியன் - 28!

சவுக்கடியுடன் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறும் ஈரானிய இயக்குநர்!

SCROLL FOR NEXT