முகப்பு
செய்திகள்

தேசிய அளவில் தங்கப் பதக்கங்களைக் குவித்த மகன்! மாதவன் பெருமிதம்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் அண்மையில் பங்குபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டி

Updated On : 2 ஜூலை, 2019 at 11:28 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 2:54 PM

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் அண்மையில் பங்குபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இது குறித்து மாதவன், 'உங்கள் அனைவரின் ஆசீர்வாதம், வாழ்த்துக்கள் மற்றும் கடவுளின் அருள் இவைதான் காரணம் இந்த வெற்றிக்கு. வேதாந்த் எங்களை மீண்டும் மிகவும் பெருமைப்படுத்தி உள்ளார். தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில்மூன்று தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

முதல் முறையாக எனது மகன் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்தது ஆசிய போட்டிகளுக்கு தயாராகி வருகிறார். அவரை ஊக்கப்படுத்தி பயிற்சி அளித்த ஜி.ஏ.எஃப் மும்பை, பயிற்சியாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி’ என்று தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.