முகப்பு
செய்திகள்

சினிமாவை விட்டு விலகிய சாய்ரா வாஸிம்: சித்தார்த் விமரிசனம்!

இது உங்கள் வாழ்க்கை. உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். நம் கலையும் நம் தொழிலும் தான்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:24 AM
பகிர்:

காஷ்மிர் பகுதியைச் சேர்ந்த சாய்ரா வாஸிம், அமீர் கான் நடித்த டங்கல் படத்தின் மூலம் 15 வயதில் திரையுலகில் அறிமுகமானார். சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது. அடுத்ததாக அவர் நடித்த சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படமும் அவருக்குப் பேரும் புகழையும் தந்தது. தி ஸ்கை ஈஸ் பிங்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவிலிருந்து விலகுவதாகத் திடீரென அறிவித்துள்ளார் சாய்ரா வாஸிம்.

தனது நம்பிக்கையிலும் மதத்திலும் தலையீடுகள் இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுகிறேன். நாங்கு இங்குச் சரியாகப் பொருந்தினாலும் நான் இவ்விடத்தைச் சார்ந்தவர் இல்லை என்றார். இதனால் சாய்ராவின் முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.

இந்நிலையில் சாய்ரா வாஸிமின் இந்த முடிவு குறித்து நடிகர் சித்தார்த் கூறியுள்ளதாவது: 

இது உங்கள் வாழ்க்கை. உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். நம் கலையும் நம் தொழிலும் தான் நம் வாழ்க்கை என நம்புகிறேன். இதிலிருந்து மதத்தைக் கலக்காமல் இருப்பதற்குப் போராடுகிறோம். அதற்கு இங்கு வேலையில்லை. உங்கள் மதத்தினால் இந்த முடிவை நீங்கள் எடுத்திருந்தால், நீங்கள் இத்துறைக்கானவர் இல்லை என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.