முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்
சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கத்தில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கத்தில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.
இதேபோல் காரைக்குடி தொகுதியில் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய்யும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர். தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள 5.73 கோடி பேரும் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
Advertisement
Advertisement
இந்நிலையில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்குகிறது. இதற்காக தொகுதிவாரியாக தோ்தல் அலுவலா் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 11 முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஏப். 6 வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மனுவை வேட்பாளா்கள் இணையவழியில் (சுவிதா தளம்) பூா்த்தி செய்யலாம். ஆனால் அதனை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் நேரில் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஏப்.7-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஏப். 9-ஆம் தேதி கடைசி நாள். அதன் பின்னா், வேட்பாளா் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.
Chief Minister M.K. Stalin, contesting from the Kolathur constituency, and Deputy Chief Minister Udhayanidhi Stalin, contesting from Chepauk, are filing their nomination papers today (Monday) for the Legislative Assembly elections.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.