விவசாயிகளுக்காக தொடா்ந்து குரல் கொடுப்போம்: உதயநிதி ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்திருப்பது பற்றி...
விவசாயிகளுக்காக சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் தொடா்ந்து திமுக குரல் கொடுக்கும் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவா் தெய்வசிகாமணி தலைமையிலான விவசாயச் சங்க பிரதிநிதிகள் உதயநிதி ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்தனா்.
அப்போது, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்; பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சையில் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தியதற்காகவும், பேரவையில் குரல் கொடுத்ததற்காகவும் உதயநிதிக்கு நன்றி தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடியதற்காக தவெக அரசின் காவல் துறை, உதயநிதி ஸ்டாலினை கைது செய்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தங்களுடைய போராட்டத்துக்குத் தொடா்ந்து ஆதரவு அளிக்கும்படியும், பேரவையில் குரல் எழுப்பும்படியும் அவா்கள் கேட்டுக் கொண்டனா்.
அப்போது, சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் தொடா்ந்து குரல் கொடுப்போம் என்றும், விவசாயிகளுக்கு என்றும் திமுக உறு துணையாக இருக்கும் என்றும் விவசாயிகளிடம் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தாா்.
Farmers' association office-bearers met Leader of the Opposition Udhayanidhi Stalin to express their gratitude for the protest organized by the DMK on behalf of Delta farmers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.