FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி!

தவெக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருப்பது பற்றி...

உதயநிதி ஸ்டாலின் - x
பகிர்:

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் இன்று காலை தாக்கல் செய்து உரையாற்றினார்.

இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

Advertisement

Advertisement

“வேளாண் பட்ஜெட் என்று கூறுவதைவிட, மரபை மீறி முதல்வரை புகழும் செயல்களை செய்துள்ளனர். இந்த ஆட்சியில் காவிரியில்தான் தண்ணீர் வரவில்லை என்றால், பட்ஜெட்டிலும் திட்டங்கள் இல்லை.

மேக்கேதாட்டு பிரச்னை, பயிர்க் கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை என தவெக ஆட்சியில் விவசாயிகள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்துள்ளோம். எங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்துள்ளோம்.

திமுக அரசின் திட்டங்களுக்கு பெயர்களை மாற்றி புதுத் திட்டங்கள் போல அறிவித்துள்ளார்கள். இந்த பட்ஜெட்டில் உருப்படியாக எதுவுமே கிடையாது. 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி எனக் கூறி மக்களை ஏமாற்றி முதல்வர் ஆட்சிக்கு வந்தார்.

மேக்கேதாட்டு அணை ஒவ்வொரு நாளும் தீவிரமாகச் சென்று கொண்டிருக்கிறது. காவிரி நீர் கிடையாது என்று கர்நாடகம் தெளிவாக கூறிவிட்டது. இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறது என்பதை காட்டும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

நாளைய கூட்டத்தில் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு, விவசாயிகள் பிரச்னைகள் பற்றி விவாதிக்க பேரவைத் தலைவரிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அவர் அனுமதிப்பார் என்று நம்புகிறேன். எங்களின் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

summary

Udhayanidhi Stalin's criticism TVK government's agriculture budget

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments