பேரவையில் சினிமா பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம்..! உதயநிதி பேச்சுக்கு தவெகவினர் எதிர்ப்பு
பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு தவெகவினர் எதிர்ப்பு...
சினிமாவில் பேசியது போல பஞ்ச் டயலாக் எல்லாம் பேரவையில் பேசினால் சரிவராது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "முதல்வர் அந்த 3 கோப்புகள் மீது ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம் சட்டப்பேரவையில் பேசினால் சரிவராது" என்று கூறினார்.
உடனே தவெக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே திமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று குரல் எழுப்பினார்கள்.
Advertisement
Advertisement
"முதல்வர் பேசியதை 'சினிமாவில் பேசியது போல பஞ்ச் டயலாக்' என்று சொன்னால் எப்படி ஆளும் கட்சியினர் எதிர்க்காமல் இருப்பார்கள்" என்றார் பேரவைத் தலைவர்.
மீண்டும் உதயநிதி எழுந்து, "கோப்புகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கட்டும். இந்த உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம்" என்றார்.
இதையடுத்து, 'சினிமா போல பஞ்ச் டயலாக்' என்ற வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
பின்னர் இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன்,
"மக்களுக்கு அனைத்தும் தெரிய வேண்டும் என்றுதான் நேரலை செய்யப்படுகிறது. எதிர்க்கட்சியினரையும் கேமராவில் காட்டுங்கள். முழுமையான நேரலை தவெக ஆட்சியில்தான் கொண்டு வந்திருக்கிறோம்.
யார் எந்த கட்சியாக இருந்தாலும் மரபு மீறி பேசினால் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அப்படியான ஒரு நடுநிலையான பேரவைத் தலைவரை நாம் பெற்றிருக்கிறோம்" என்றார்.
TVK members oppose Udhayanidhi stalin remarks
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.