இளையராஜா - யுவன் இசையமைத்துள்ள மாமனிதன் பட வெளியீடு எப்போது?: இயக்குநர் பதில்!
இப்படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளார்கள்.
யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது. இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்கள்.
மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுபெற்றது. இந்நிலையில் இப்படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. ட்விட்டரில் அவர் கூறியதாவது: மாமனிதன் படம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.