முகப்பு
செய்திகள்

கதாநாயகன் ஆகிறார் தங்கர் பச்சான் மகன்!

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் கதாநாயகனாகத் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:37 AM
பகிர்:

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் கதாநாயகனாகத் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். 

கடைசியாக 2012-ல் அம்மாவின் கைபேசி மற்றும் 2017-ல் களவாடிய பொழுதுகள் படங்களை இயக்கிய தங்கர் பச்சான், சிறிது இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் இது.  கிராமத்துப் படங்களின் மூலம் புகழ் பெற்ற தங்கர் பச்சான், தற்போது மகனை வைத்து இயக்கும் கதை சென்னையில் நடப்பது போல அமைத்துள்ளார். மிலானா, அஸ்வினி, முனிஸ்காந்த் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - தரண் குமார். 

சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் தலைமையில் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →