செய்திகள்

ரூ.15 கோடி செலவழித்து கைவிடப்பட்ட 'விஜய்' படம்?

ரூ.15 கோலி செலவழித்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகரின் படம் முதல்கட்டப் படப்பிடிப்புடன் கைவிடப்பட்டது.

Raghavendran

ரூ.15 கோடி செலவழித்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகரின் படம் முதல்கட்டப் படப்பிடிப்புடன் கைவிடப்பட்டது.

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. ''ரௌடி'' எனும் அடைமொழியுடன் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் பெருகி வருகிறது. அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ''டியர் காம்ரேட்'' படம் ஜூலை 26-ல் திரைக்கு வரவுள்ளது. 

இதையடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் பைக் ரேஸ் வீரராக ''ஹீரோ'' எனும் படத்தில் நடித்து வந்தார். இதில் ஷாலினி பாண்டே, மாளவிகா மோஹனன் என இரு கதாநாயகிகள். ரூ.15 கோடி செலவில் முதல்கட்டப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது.

இந்நிலையில், பட அமைப்பு சரியாக அமையாதது மற்றும் இப்படத்தின் இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை படைப்பில் திருப்தி இல்லாத காரணத்தால் ''ஹீரோ'' படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT