முகப்பு
செய்திகள்

இலங்கை முன்னாள் வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இலங்கையின் மகத்தான கிரிக்கெட் வீரராக அறியப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:38 AM
பகிர்:

133 டெஸ்டுகள், 350 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடி இலங்கையின் மகத்தான கிரிக்கெட் வீரராக அறியப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ் இனத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர், முரளிதரன். உலகம் முழுக்கத் தன் முத்திரையைப் பதித்துள்ளார். முரளிதரனாக நடிப்பது எனக்கு மிகவும் சவாலாக இருக்கும். ஆனால் அந்த வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். இந்தப் படத்தில் ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவுள்ளார் முரளிதரன். கிரிக்கெட் தொடர்பான விவரங்களில் எனக்கு ஆலோசனகள் சொல்லவுள்ளார் என்றார். விஜய் சேதுபதி போன்ற ஒரு நடிகர் என் வேடத்தில் நடிப்பதைக் கெளரவமாக எண்ணுகிறேன். படப்பிடிப்பு முடியும்வரை இப்படத்துடன் என்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போகிறேன் என்று முரளிதரன் கூறியுள்ளார். 

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கவுள்ளார். இந்தப் படம் அடுத்த வருடக் கடைசியில் வெளியாகவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →