முகப்பு
செய்திகள்

இளையராஜாவின் பாடல்களை அவருடைய அனுமதியின்றிப் பயன்படுத்தக்கூடாது: உயர் நீதிமன்றம்

இளையராஜாவின் பாடல்களை அவருடைய அனுமதியின்றிப் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:04 AM
பகிர்:

இளையராஜாவின் பாடல்களை அவருடைய அனுமதியின்றிப் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இசை நிறுவனங்கள் தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே இசை நிறுவனங்கள் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தக் கூடாது என்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இளையராஜா தொடர்ந்த வழக்கில் ஏற்கெனவே விதித்த இடைக்காலத்தடையை உறுதிப்படுத்தி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இளையராஜாவிடம் அனுமதி பெற்று இசைப்போட்டிகள், ஆன்லைன், ரேடியோவில் அவருடைய பாடல்களைப் பயன்படுத்தலாம். இளையராஜாவின் பாடல்களை அவருடைய அனுமதியின்றிப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த 10 ஆண்டுகள் உரிமை உள்ளதாக அகி நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.