செய்திகள்

'குழந்தைத்தனத்தின் பிரதிபலிப்பு' என்றென்றும் ரஜினி! சந்தோஷ் சிவன் மகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின்...

Raghavendran

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி அண்மையில் முடிவடைந்தது. 2-ஆம் கட்ட படப்பிடிப்பு மே 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் 2020-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். 

இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரன் வேத் கிருஷ்ணா உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கூறுகையில், 

குழந்தைத்தனத்தின் பிரதிபலிப்பாக பேரனுடன், படக்காட்சிகளைப் பார்க்கிறார். என்றென்றும் ரஜினி! தர்பார் படப்படிப்பின் போது நான் எடுத்த புகைப்படம் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தஞ்சை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

இருளுக்கு மத்தியில் நியூ யார்க்கில் ஒளி: அரங்கை அதிரவிட்ட மம்தானி பேச்சு!

மகளே என் மருமகளே தொடரில் இணைந்த சிறகடிக்க ஆசை நடிகர்!

கூட்டணி பற்றி கவலை வேண்டாம்; அது தானாக நடக்கும்: இபிஎஸ் பேச்சு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி செவிலியர் அலுவலர் பணி!

SCROLL FOR NEXT