செய்திகள்

ஆயிரம் கோடி ரசிகர்களின் பிகில்களுடன் பிறந்த நாள் கொண்டாடுகிறார் நடிகர் விஜய்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் விஜய் இன்று தனது 45-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

சினேகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாள் சிறப்பாக அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஃபோஸ்டரை நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர் படக்குழுவினர். அது சில மணி நேரத்திலேயே வைரலானது.

இதையடுத்து பிகில் படத்தின் செகண்ட் லுக் ஃபோஸ்டர் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியானது. இரண்டு ஃபோஸ்டர்களுமே அட்டகாசம் என்று விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வழக்கம் போல விஜயின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் ரசிகர்கள் இறங்கிவிட்டனர். அட்லி இயக்கத்தில் வெளி வரவிருக்கும் இப்படத்துக்கான எதிர்ப்பார்ப்பு போஸ்டர் வெளியானதும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவிருக்கிறார் என்று அறியப்படுகிறது.

அதனை மெய்ப்பிக்கும் வகையில் இந்த இரண்டு 1போஸ்டர்களும் அமைந்திருந்தது. ஒரு விஜயைச் சுற்றி மூன்று விஜய் விதவிதமான கெட்டப்புக்களை தோன்றும் அந்த ஃபோஸ்டரைப் பார்த்து ரசிகர்கள் இது இரட்டை வேடமா அல்லது நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ளாரா அல்லது மகன் விஜய் இப்படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் வருகிறாரா என்று அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

#என்றும்_தலஅஜித்

#happybirthdayTHALAPATHY

இந்நிலையில் இணையத்தில் இன்று நெம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்த விஜய் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை முந்தி விட்டது 'என்றும் தல அஜித்' என்ற ட்ரெண்டிங் வாசகம். இது போட்டிக்காக தொடங்கப்பட்டதா அல்லது விளையாட்டுக்காகவே என்பது அஜித் ரசிகர்களுக்கே வெளிச்சம்.

பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT