முகப்பு
செய்திகள்

கடாரம் கொண்டான் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வந்த சாமி 2 மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:23 AM
பகிர்:

கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சாமி 2 மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்கள் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவு வெற்றி பெறவில்லை. இதனால் நடிகர் விக்ரமின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான கடாரம் கொண்டான் படம் வெளியாக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

ராஜேஷ் செல்வா இயக்கும் கடாரம் கொண்டான் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், லீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரம் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட அறிவிப்பினைத் தொடர்ந்து இப்படத்தைப் பற்றிய அதிக செய்திகள் வரவில்லை. இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கமல் ஹாசனின் பிறந்தநாளன்று வெளியானது. தற்போது படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் வரும் ஜூலை 19-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 3-ம் தேதி கடாரம் கொண்டான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →