நடிகை ஹன்சிகா, இயக்குநர் ஜமீல் மீதான புகாருக்குப் பதில் தர காவல் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கி வருகிறார். கருணாகரன், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். இசை - ஜிப்ரான். ஹன்சிகா பெண் துறவி வேடத்தில் புகைப்பிடிப்பது போன்ற ஒரு இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
மஹா திரைப்பட போஸ்டர் இந்து மதத்தில் உள்ள பெண் துறவிகளையும் இந்து மத உணர்வுகளையும் புண்படுத்துவது போல உள்ளது. எனவே இயக்குநர் ஜமீல், ஹன்சிகா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் நாராயணன், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில் புகார் கொடுத்து ஒரு மாதமாகியும் நடவடிக்கை இல்லை. எனவே தன்னுடைய புகார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி என நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. நடிகை ஹன்சிகா, இயக்குநர் ஜமீல் மீதான புகாருக்கு இரு வாரங்களில் பதிலளிக்க காவல் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.