செய்திகள்

பந்தயத்தில் முந்திய அருண் விஜய் நடித்த தடம்: தமிழகம் முழுக்க அமோக வரவேற்பு!

நல்ல கதை, திரைக்கதை, அருமையான உள்ளடக்கம் உள்ள ஒரு படத்தை ரசிகர்கள் கைவிடமாட்டார்கள் என்பதை தடம் படம் நிரூபித்துள்ளது...

எழில்

கடந்த வாரம் 6 தமிழ்ப் படங்கள் வெளியாகின. இதில் ஓவியா நடித்த 90 எம்எல் படத்துக்குத்தான் ஆரம்பத்தில் அதிக வரவேற்பு இருந்தன. 

அதிகாலை 5 மணிக்காட்சியைக் காண ரசிகர்கள் துடித்தார்கள். ஓவியா நடித்து வெளியாகும் படம் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் போன்ற காரணங்களால் இப்படத்துக்கு முதல் நாளன்று நல்ல வசூல் கிடைத்தது. உண்மையில் முதல் நாளன்று தடம் படத்தை விடவும் 90 எம்எல் படத்துக்கே அதிக வசூல் கிடைத்தது.

ஆனால் முதல் காட்சியிலிருந்தே தடம் படத்துக்கு அற்புதமான விமரிசனங்கள் கிடைத்ததால் 2-ம் நாளிலிருந்து நிலைமை மாறியது. 90 எம்எல் படத்தை விடவும் ரசிகர்கள் தடம் படத்தைப் பார்க்க ஆவலானார்கள். இதனால் தடாலடித் திருப்பங்கள் ஏற்படத் தொடங்கின. 

சென்னையில் உள்ள திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ்களில் இப்போது தடம் படம்தான் அதிக இருக்கைகள் கொண்ட பெரிய திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. சத்யம், சங்கம், கமலா, உதயம், ஆல்பர்ட், வெற்றி என முக்கியத் திரையரங்குகளில் தடம் படத்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. சத்யம் திரையரங்கில் முதலில் சீஸன் என்கிற சிறிய திரையரங்கில் திரையிடப்பட்ட தடம் படம், தற்போது அதிக இருக்கைகள் கொண்ட சத்யம் திரையரங்கில் 4 காட்சிகளாகத் திரையிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க இதே நிலைதான். இன்றைய தேதியில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பெரிய திரையரங்குகளில் தடம் படம் தான் திரையிடப்பட்டுள்ளது. 

மகிழ் திருமேனி இயக்கிய இந்தப் படத்தில் அருண் விஜய், தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், யோகி பாபு, சோனியா அகர்வால், வித்யா பிரதீப் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - அருண் ராஜ்.

நல்ல கதை, திரைக்கதை, அருமையான உள்ளடக்கம் உள்ள ஒரு படத்தை ரசிகர்கள் கைவிடமாட்டார்கள் என்பதை தடம் படம் நிரூபித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மகளிரணி மாநாடு தொடங்கியது!

யு19 உலகக் கோப்பை: பந்துவீச்சில் அசத்திய இங்கிலாந்து; 136 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

77வது குடியரசு நாள் விழா - புகைப்படங்கள்

அதிகரித்த காட்சிகள்... வசூல் வேட்டையில் மங்காத்தா!

புது வசந்தம் தொடரில் அம்மனாக நடிக்கும் அக்‌ஷயா!

SCROLL FOR NEXT