செய்திகள்

புதிய கூட்டணி: சூர்யாவை இயக்கவுள்ள சிவா!

எழில்

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.

வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்கிற படத்தில் நடித்துவருகிறார் அஜித். அடுத்ததாக, போனி கபூர் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இயக்குநர் சிவாவின் அடுத்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. என்ஜிகே, காப்பான் என இரு படங்களில் தற்போது நடித்துமுடித்துள்ளார் சூர்யா.  இறுதிச்சுற்று சுதாவின் படத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார் சூர்யா. அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தபிறகு இந்த வருட இறுதியில் சிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT