செய்திகள்

கன்னட நடிகரை தாக்கினாரா நடிகர் விமல்?

சென்னை விருகம்பாக்கத்திலுள்ள ஒரு ஹோட்டலில் நடிகர் விமல் நண்பர்களுடன் தங்கியிருந்தார்.

சினேகா

சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விமல் அண்மையில் படப்பிடிப்புக்காக ஹோட்டல் அறையில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்தார் விமல். அதே ஹோட்டலில் கன்னட நடிகர் அபிஷேக்கும் தங்கியிருந்துள்ளார். திடீரென்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பில் முடிந்தது. இச்சம்பவத்தின் போது விமல் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

நடிகர் அபிஷேக்கின் நண்பர்கள் இது குறித்து விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மூவர் மீது 294 பி என்ற குற்றப்பிரிவில் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். ஹாட்டலில் உள்ள சிசிடிவி காமரா மூலம் இந்த விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் விமல் தரப்பும் அபிஷேக் மீது புகார் அளித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT