செய்திகள்

ஆர்யா - சயீஷா திருமணம்: இருவரும் பகிர்ந்த புகைப்படங்கள்!

ஆர்யா - சயீஷாவின் திருமண நிகழ்ச்சிகள் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களாக ஹைதராபாத்தில் நடைபெற்றன...

எழில்

பிரபல பாலிவுட் நடிகர்களான சாயிரா பானு, திலீப் குமாரின் உறவினரான சயீஷா, தமிழில் வனமகன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடித்த சயீஷாவுக்கு அவருடன் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி, தற்போது திருமணமாக மலர்ந்துள்ளது. இருவரும் தற்போது காப்பான் என்கிற கே.வி. ஆனந்தின் படத்திலும் நடித்துள்ளார்கள்.

ஆர்யா (38) - சயீஷா (21) ஆகியோரின் காதல் திருமணம், மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக காதலர் தினத்தன்று இருவரும் அறிவித்தார்கள். 

ஆர்யா - சயீஷாவின் திருமண நிகழ்ச்சிகள் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களாக ஹைதராபாத்தில் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்களை ஆர்யாவும் சயீஷாவும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

தவெக பொதுக்குழு கூட்டம்! மேடைக்கு வந்த விஜய்!

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

SCROLL FOR NEXT