செய்திகள்

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கும் ஆர்ஆர்ஆர்: நடிகர்கள், வெளியீட்டுத் தேதி குறித்து அதிகாரபூர்வத் தகவல்!

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 2017-ம் வருடம் வெளியான படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மகத்தான சாதனைகளைப் படைத்தது. இந்நிலையில் ராஜமெளலியின் அடுத்தப் படமான ஆர் ஆர் ஆர்-ன் தொடக்கவிழா, கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்றது.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் இந்தப் படத்தை இயக்கி வருகிறார் எஸ்.எஸ். ராஜமெளலி. டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் எடிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஆர் ஆர் ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார். 

அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது. 

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோரோடு இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர்களின் விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், இங்கிலாந்து நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி போன்றோரும் நடிக்கிறார்கள். மேலும் படத்தின் தலைப்பு - ஆர்ஆர்ஆர் என்பதும் இன்று உறுதியாகியுள்ளது. பாகுபலி போல அனைத்து மொழிகளுக்கும் இதே படத்தலைப்புடன் படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் ஒரே சமயத்தில் ஆர்ஆர்ஆர் வெளியாகவுள்ளது.   

மற்றும் ஆர்ஆர்ஆர் படம் 2020-ம் வருடம் ஜூலை 30 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் விடியோ:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT