செய்திகள்

‘பிஎம் நரேந்திர மோடி’ படம்: டிரெய்லர் வெளியீடு!

மக்களவை பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எழில்

பிரதமர் மோடியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடித்துள்ள பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. 

மக்களவை பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 18- ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிஎம் நரேந்திர மோடி படம், ஏப்ரல் 5-ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் சமயத்தில் இந்தப் படம் அதிகக் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஎம் நரேந்திர மோடி படம் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT