முகப்பு
செய்திகள்

விக்னேஷ் சிவன் இயக்கும் சிவகார்த்திகேயன் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அட, இத்தனை படமா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு சிவகார்த்திகேயனின் புதுப்படங்களின் அறிவிப்புகள் ஆச்சர்யப்படுத்துகின்றன...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:26 AM
பகிர்:

அட, இத்தனை படமா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு சிவகார்த்திகேயனின் புதுப்படங்களின் அறிவிப்புகள் ஆச்சர்யப்படுத்துகின்றன.

எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் மே 1 அன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து ஆர். ரவிக்குமார், மித்ரன் ஆகியோரின் இயக்கங்களில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

இப்போது இன்னொரு புதுப்பட அறிவிப்பும் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் 17-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா இப்படத்தைத் தயாரிக்கிறது. இசை - அனிருத். 

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது. அடுத்த வருடம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.