செய்திகள்

நயன்தாராவிடமும் விக்னேஷ் சிவனிடமும் மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்: சர்ச்சைப் பேச்சு குறித்து ராதாரவி

அந்த நிகழ்வில் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் நான் பேசியதற்குப் பாராட்டு தெரிவித்தார்கள். நன்றாகப் பேசினீர்கள் என்று சொன்னார்கள்... 

எழில்

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மூத்த நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து அநாகரிகமாகப் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ராதாரவி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

அந்த நிகழ்வில் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் நான் பேசியதற்குப் பாராட்டு தெரிவித்தார்கள். நன்றாகப் பேசினீர்கள் என்று சொன்னார்கள். நான் தவறாகப் பேசியிருந்தால் அங்கேயே கண்டனம் தெரிவித்திருப்பார்களே! அங்கே கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏனெனில் நான் தவறாகப் பேசவில்லை.

என் பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதனால் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். எனினும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரிடமும் மட்டும் என் மனவருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் பாதித்துள்ளது எனச் சொல்லும்போது வருத்தமாக உள்ளது. அவர்கள் என் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள். என் வருத்தத்தை நான் நேரில் சென்றுகூடச் சொல்வேன். தயக்கம் கிடையாது. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 நாள்களில் காந்தாரா சாப்டர் - 1 இவ்வளவு வசூலா?

நடிகையிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்!

நாகமலை குன்று 4-வது உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவிப்பு

கரூர் பலி: தவெக மேல்முறையீட்டு மனு அக். 10ல் விசாரணை!

அகமதாபாத்தில் வங்கி மோசடி: 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

SCROLL FOR NEXT