செய்திகள்

மீ டூ இயக்கத்துக்கு நயன்தாரா ஆதரவு தரவில்லையா?: நடிகர் சித்தார்த்தின் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்!

எழில்

அண்​மைகால​மாகச் சமூகவலைத்​த​ளங்​க​ளில் மீ டூ எனும் தலைப்​பில் பெண்​கள் தங்​க​ளுக்கு நேர்ந்த பாலி​யல் துன்​பு​றுத்​தல்​க​ளை​யும், கொடு​மை​க​ளை​யும் பகிர்ந்து வரு​வது பர​வ​லாகக் கவ​னத்​தைப் பெற்று வரு​கி​றது. குறிப்​பாக, சில முக்கிய பிர​மு​கர்​க​ளுக்கு எதி​ராக முன்​வைக்​கப்​ப​டும் குற்​றச்​சாட்​டு​க​ளும் பெரும் பர​ப​ரப்பை ஏற்​ப​டுத்தி வரு​கின்​றன.

இந்நிலையில், நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மூத்த நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து அநாகரிகமாகப் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ராதாரவியின் சர்ச்சைப் பேச்சுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மீ டு இயக்கம் குறித்த திரைத்துறையினரின் மெளனம் தன்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. நீங்கள் பாதித்தால் மட்டுமே அது குறித்துப் பேசுவீர்கள் என்றால், இது துணிச்சலான செயல் அல்ல என்று நடிகர் சித்தார்த் சமீபத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இது நயன்தாராவைக் குறிக்கும் விதமாக இருப்பதால் இதற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பெண்களின் பாதுகாப்புக்கும் அவர்களுடைய நலனுக்காகவும் எப்போதும் துணை நிற்பவர் நயன்தாரா. அவர் பணியாற்றும் படங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் அமைய ஆதரவாக உள்ளவர். பெண்கள் பலருக்குப் பக்கபலமாகவும் பண ரீதியிலான உதவியையும் அளித்தவர். அவருடைய படங்களில் மீ டூ பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். ஆனால் இவற்றைச் சமூகவலைத்தளங்களில் சில காரணங்களுக்காக அவர் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.

ஒரு பெண் மீதான மோசமான கருத்து குறித்துப் பேசும்போது அதைப் பற்றிப் பேசாமல் சிறிய குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமத்துகிறார்கள். ஒருவர் சமூகவலைத்தளங்களில் அமைதியாக இருப்பதற்காகத் தாக்கப்படுவது வேதனைக்குரியது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT