முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படத்துக்கு இசையமைக்கும் இமான்!

பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்திருந்தார்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:50 AM
பகிர்:

கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. 

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இமான் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார். கடந்த வருடம் வெளியான பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்திருந்தார். 

மே 8 முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →