செய்திகள்

நோ ஃபில்டர் நோ மேக்கப்பா? பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா!

பின்னர் 2007-ஆம் ஆண்டு 'சவாரியா' என்ற படத்தின் மூலம் நடிகையானார்.

சினேகா

பாலிவுட் பேஷன் உலகின் நாயகியாக வலம் வரும் பிரபல நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் 2005-ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலியின் 'பிளாக்' என்ற படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். 

2007-ஆம் ஆண்டு 'சவாரியா' என்ற படத்தின் மூலம் நடிகையானார் சோனம் கபூர்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் தனக்குள் இருக்கும் இயக்குநர் ஆசையை மறக்க முடியவில்லையாம். 'எனக்கு காமெடி பிடிக்குமென்றாலும், காமெடி படத்தை இயக்கினால் திருப்தி கிடைக்காது என்பதால் ரசிகர்களை பயமுறுத்தும் வகையில் திகில் படமொன்ற இயக்க விரும்புகிறேன். இருந்தாலும் நடிப்பதை விட்டுவிட மாட்டேன்' என்கிறார் சோனம் கபூர்.

அண்மையில் மேக் அப் இன்றி செல்ஃபி எடுத்து அதைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் சோனம் கபூர்.

இது தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமகால பாலிவுட் கனவுக் கன்னிகள் பலரும் தங்களின் அழகிய முகத்தை எந்தவித மேக் அப்பும் இன்றி (வெள்ளையடிக்காம!) அவரவர் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதில் ஒரு சிறப்பு அம்சமாக புகைப்படங்களை மெருகேற்றக் கூடிய ஃபில்டர் எஃபக்ட்களும் பயன்படுத்தாமல் உண்மை முகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT