செய்திகள்

நடிகர் விவேக்கை கலாய்த்த டிக் டாக் விடியோ இதுதான்! (விடியோ)

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புகுந்து விளையாடும் ஒரு செயலி டிக் டாக்.

சினேகா

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புகுந்து விளையாடும் ஒரு செயலி டிக் டாக். தனது அபிமான நடிகர் நடிகைகளின் பாடல்கள் அல்லது படக் காட்சிகளை அபிநயித்து தங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒரு களமாக இருந்து வருகிறது. சிலருக்கு பொழுதுபோக்காக இருந்து வரும் இந்த டிக் டாக் பலவகையிலும் தொல்லையாகவும் இருக்கிறது என்று புகார்கள் வரத் தொடங்கவே, தமிழ்நாட்டில் டிக் டாக் செயலிக்கு இடைக்கால தடை விதிக்க கோரினர்.

ஆனால் இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் நீக்கிய பிறகு இளைஞர்கள் சந்தோஷம் அடைந்தனர். இந்த டிக் டாக் செயலி பற்றி இதற்கு முன்பு தெரியாவர்கள் கூட ப்ளே ஸ்டோர் மூலம் அச்செயலியை பதிவிறக்கம் செய்யத் தொடங்கினர். சிலர் காமெடி காட்சிகளை கூட தங்கள் முகபாவத்துடன் டிக் டாக்கில் வெளியிட்டு மகிழ்ந்தனர். 

தற்போது அப்படியொரு டிக் டாக் விடியோ இணையத்தில் வலம் வருகிறது. அது சாமி படத்தில் விவேக் நடித்திருந்த 'லா ஷகீலா' என்ற காமெடி காட்சிதான். அதனை ஒரு நபர் தன் நாயுடன் நடித்து டிக் டாக்கில் பதிவு செய்து விடியோவை இணையத்தில் பரவ விட்டுள்ளார். இந்த காணொளியைப் பார்த்த நடிகர் விவேக், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியது, ‘அட பாவிங்களா! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா?!?!' என்று கூறி அந்த டிக் டாக் விடியோவையும் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வரத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகவல் தொடா்பு துண்டிப்பு: ஆறுமுகனேரியில் ரயில் நிறுத்திவைப்பு

வாலிகண்டபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

ரூ.1 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள், மடிக்கணினி திருடிய இளைஞா் கைது

தீபாளியன்று பசுமைப் பட்டாசு: உச்சநீதிமன்றத்தை தில்லி அரசு அணுகும்: முதல்வா் ரேகா குப்தா

கரடி தாக்கியதில் ஒருவா் காயம்

SCROLL FOR NEXT