செய்திகள்

பிரபல படத் தயாரிப்பாளர் காலமானார்!

DIN

கோலிவுட்டில் விஜயா வாகினி புரொடெக்ஷன்ஸ் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. தமிழ் திரை உலகில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான இந்நிறுவனம் 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எங்க வீட்டுப் பிள்ளை, உழைப்பாளி,  உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த விஜயா வாகினி இன்றும் வெற்றிக்கரமாக தங்கள் பணியைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது. விஜயா வாகினியின் நிறுவனரான நாகி ரெட்டியின் மறைவுக்குப் பிறகு வெங்கட்ராம ரெட்டி திறம்பட நிர்வகித்து வந்தார். 

தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா ஆகிய படங்கள் இவரது தயாரிப்பில் வெளிவந்துள்ளது. தற்போது நடிகர் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்து வரும் 'சங்கத்தமிழன்' படத்தை தயாரித்து வந்தார். 75 வயது நிரம்பிய வெங்கட்ராம ரெட்டி, அண்மையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த  நிலையில், மே 12-ம் தேதி (ஞாயிறு) பிற்பகல் 1 மணியளவில் காலமானார். இவருக்கு பாரதி ரெட்டி என்ற மனைவியும், ராஜேஷ் ரெட்டி என்ற மகனும், ஆராதனா ரெட்டி, அர்ச்சனா ரெட்டி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். அவரது இறுதி சடங்குகள் திங்கள் காலை 7.30 - 9.00 மணிக்குள் நெசப்பாக்கத்தில் நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT