செய்திகள்

இந்த நடிகரை கூட திருமணம் செய்து கொள்வேன்! ஆடுகளம் நாயகி தடாலடி விருப்பம்

நடிகை டாப்ஸி பன்னுவுக்கு ஏனோ தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

ராக்கி

நடிகை டாப்ஸி பன்னுவுக்கு ஏனோ தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஹிந்தி படங்களில் தற்போது அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

பிங்க், நாம் ஷபானா, மன்மர்சியான், பத்லா என அவரது வெற்றிப் பட வரிசை தொடர்ந்து வருகிறது. அமிதாப் பச்சனுடன் அவர் நடித்த பிங்க் மற்றும் பத்லா படங்கள் பாலிவுட் ரசிகர்களிடையே அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இயல்பான அதே சமயம் ஸ்டைலான தனித்துவ நடிப்பினால் அனைவரின் மனம் கவர்ந்த நடிகையாகி விட்டார் டாப்ஸி. 

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மன்மர்சியான் படத்தில் விக்கி கவுசல் எனும் நடிகருடன் டாப்ஸி இணைந்து நடித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இந்த இணையரின் காட்சிகள் வரும் போதெல்லாம் திரையரங்கில் விசில் சப்தம் அதிகமாக கேட்டது. மேலும் ஜோடிப் பொருத்தம் அருமை என பாலிவுட் மீடியாக்களும் பாராட்டிக் குவித்தது.

இந்நிலையில், அண்மையில் விக்கி மற்றும் டாப்ஸி ஜோடியை ஒரு தனியார் சானல் பேட்டி எடுத்தது. அதில் டாப்ஸியிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டதும், விக்கி கவுசலைக் கைக்காட்டி எனக்கு சரியான ஆள் இவர்தான் என்று விளையாட்டாக தன் விருப்பத்தை தெரிவித்தார். இது இணையத்திலும் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT