செய்திகள்

அடிடா அவளை பாடலுக்காக இப்போது மன்னிப்பு கேட்கிறேன்! இயக்குநர் செல்வராகவன் பேட்டி! (விடியோ)

புதுப்பேட்டை 2 படம் எடுப்பதை விடவும் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் எடுக்கவே தான் மிகவும் விரும்புவதாக இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.

உமா ஷக்தி.

புதுப்பேட்டை 2 படம் எடுப்பதை விடவும் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் எடுக்கவே தான் மிகவும் விரும்புவதாக இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் இது குறித்துக் கூறியதாவது: வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள், புதுப்பேட்டை 2 எப்போது என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை, ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்க வேண்டும் என்பதுதான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம் என்று கூறியுள்ளார்.

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள். இவர்களுடன் சாய் பல்லவி, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கடந்த தீபாவளிக்கு வெளி வர வேண்டிய படம் இது. ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமான என்ஜிகே படத்தின் வெளியீடு விரைவில் நிகழவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக படத்தின் டீசர் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது. இயக்குநர் செல்வராகவனின் 42- ஆவது பிறந்த நாளன்று, அவர் இயக்கதில் சூர்யா நடித்து வரும்  'என்ஜிகே' படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் பாடல்கள் வெளியாகின. கவிஞர் உமா தேவி எழுதிய பாடலான ‘அன்பே பேரன்பே’ யூட்யூபில் வைராகிவருகின்றது. இதுவரை 6 மில்லியன் பார்வையாளர்களை அடைந்துள்ளது.

சினிமா எக்ஸ்ப்ரஸ் நிருபர் ஆஷாமீரா ஐயப்பனுடான நேர்காணலில் இயக்குநர் செல்வராகவன் தன்னுடைய படங்களைப் பற்றி மனம் திறந்து கூறுகிறார். முழு விடியோவையும் காண

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT