பேட்ட மற்றும் 96 படங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அடுத்து த்ரிஷா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் பரமபதம் விளையாட்டு. திருஞானம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நந்தா, ரிச்சர்ட் ஆகியோர் நடித்துள்ளனர். போலவே, திரிஷா மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கும் சுமந்த் ராதாகிருஷ்ணனின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.
மேலும், சரவணன் இயக்கத்தில் ராங்கி எனும் படத்திலும் நடித்து வருகிறார் த்ரிஷா. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் சில சிறப்பு காட்சிகளுக்காக உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஷூட்டிங் நடத்த படக்குழு முடிவெடுத்திருந்தனர். ஆனால், அங்கு படப்பிடிப்பு நடத்த கடுமையான விதிமுறைகள் இருப்பதால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லையாமல். படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தவுடன் த்ரிஷா உஸ்பெகிஸ்தானுக்கு பறக்கவிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.